தனியன்-1
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:
பரமாத்மாவாகிய ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே புருஷன்.[புருஷனைப்பற்றிச் சொல்லும் ஸூக்தம் புருஷ ஸூக்தம்] ஜீவாத்மாக்கள் அனைவரும் ஸ்த்ரீகள் என்பது நம் ஸம்ப்ரதாயம். இதன்படி ஜீவர்கள் அனைவரும் தம் புருஷனாகிய பரமாத்மாவைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகி விடுகிறது. நாம் அவனது அடியார்கள் என்னும் ஞானம் உண்டாகி, தொடர்ந்து அவன்பால் பக்தி ஏற்பட்டு அது வளர்ந்துவிட்ட நிலையில் அவர்கள் இதயக் குகையிலே பகவான் தானே வந்து அமர்கிறான். [’அகம்படி வந்து புகுந்து ----- பள்ளி கொள்கின்ற பிரானை’- பெரியாழ்வார் திருமொழி 5-2-10]. பெண்களின் மார்பகங்களைக் கூறுவதன் உள்ளுறைப் பொருள் ‘பக்தி’யாகும் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு அறியலாம். நப்பின்னையின் மார்பின் மேல் படுத்துறங்கும் என்னும் இத்தனியனும், மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்னும் 23வது பாடல் சொற்றொடரும் ஒரே பொருளுடையவை. இங்கே அந்தர்யாமியாய் விளங்கும் எம்பெருமானைத் துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். யசோதை இளங்சிங்கம் என்று முதல் பாட்டிலும் 23வது பாடலில் அவ்விளஞ்சிங்கம் வளர்ந்த சிங்கமாகக் காட்டப்படுவதையும் கொண்டு ஆண்டாளின் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை உணரலாம். இத்தனியனில் பராசர பட்டர்” நப்பின்னையின் இதயத்தில் உறங்கிகொண்டிருக்கும் கண்ணபிரானை எழுப்பி அவனுடைய பரத்வத்தை [மேன்மையை] சொல்லி , தான் சூடிக்களைந்த மாலையால் கட்டுப்படும் அவனை வற்புறுத்தி அவனுடைய குணங்கள் செயல்களை அனுபவிக்கிறாள் ஆண்டாள். அவளுக்கு என் நமஸ்காரங்கள்” என்கிறார்.
தன் பக்தர்களிடம் பாராமுகமாயிருத்தல் பகவானுக்கு அழகல்ல. நப்பின்னை போன்ற உயர்ந்தோரின் பக்தியில் திளைத்து மகிழும் கண்ணபிரான் தன்னைப் போன்ற எளிய பக்தர்களுக்கும் முகம் கொடுத்தல் வேண்டும் என்று எம்பெருமானுக்கு உணர்த்துகிறாள் என்பதை ”அத்யாபயந்தி” என்னும் சொல் விளக்குகிறது.
ஆண்டாள் பக்தர்களைப்பற்றிச் சிந்தியாது உறங்கும் [உறங்குவதுபோல் பாவனை செய்யும்] பெருமாளையும், பெருமாளைப் பற்றிய சிந்தனையில்லாது உறங்கிக் கிடக்கும் ஜீவர்களையும் துயிலெழுப்பி உணர்த்தும் பிரபந்தமே திருப்பாவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக