புதன், 12 ஜனவரி, 2011

குருவா, கோவிந்தனா?



’ஆசார்யர்’ என்னும் சொல்லுக்கு சாஸ்திரங்களை நன்கு அறிந்து கொண்டு அதன் வழி தானும் நடந்து பிறரையும் நடக்கச் செய்பவர் என்பது பொருள். ‘குரு’ என்னும் இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்கு இருளை அகற்றி ஒளி தருபவர் என்பது பொருள். ஆசார்யனை தெய்வமாக நினை [ஆசார்ய தேவோ பவ] என்கிறது வேதம். தத்வம், பரம்பொருள், சாஸ்திரம், வேதம். வேதாந்தங்கள் பற்றிய ஞானத்தை இவர்கள் போதிப்பர். நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளே [ஸ்ரீமந் நாராயணனே] முதல் ஆசார்யன். ’கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’, ‘குருஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம’ என்பவை இதனைக் கூறும்.

தெய்வத்தை நமக்குக் காட்டித்தந்து அவரை அடைவதற்கு வழியையும் கற்பிக்கும் ஆசார்யனை [தெய்வத்தைப் பாடாமல்] பாடுவதில் தவறில்லை என்பது கருத்து. ஏனெனில் இந்த ஆசார்யர் இல்லையெனில் தெய்வத்தை அறிந்துகொண்டிருக்கமுடியாதே!

‘குரு கோவிந்த்’ எனத் தொடங்கும் கபீர்தாஸரின் தோஹா [குறள்] கூறும் கருத்தும் இதுவே!


 GURU GOBIND DOU KHADE KAKE LAGOO PAYE,
 BALIHARI GURU APNE,GOBIND DIYO MILAYE

 "குரு, கோவிந்தன் இருவரும் ஒரே சமயத்தில் என் எதிரில் வந்து நின்றால் நான் முதலில் யார் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்? குருவின் திருவடிகளில் தான், ஐயம் என்ன! இந்த கோவிந்தனை எனக்குக் காட்டிக்கொடுத்தவரே இந்த குருதானே!"என்கிறார்.

ஒருவருக்கு ஆசார்யர் ஒருவர்தானா? அல்லது பலர் இருக்கலாமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக