வியாழன், 13 ஜனவரி, 2011

ஸ்ரீ ராமானுஜர்



வேதம் கற்பிப்பவர்,வேதாந்த ஞானம்,சாஸ்திரங்களைப் போதிப்பவர், ஸமாச்ரயண, பரந்யாஸங்களைச் செய்து வைப்பவர்,ஸ்ரீபாஷ்யம், பகவத்கீதைமுதலிய நூல்களை காலக்ஷேபமாக ஸாதிப்பவர் என ஒருவர் பல முகங்களில் ஆசார்யர்களைப் பெற்றுப் பயனடையலாம்.

விசிஷ்டாத்வைதத்தை விளங்கச் செய்த ஸ்ரீ ராமானுஜர் ஐந்து ஆசார்யர்களைப் பெற்றிருந்தார்.

1-ஸ்ரீ பெரியநம்பி-மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து வைத்து திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களுள் த்வயத்துக்கு மட்டும் அர்த்தம் ஸாதித்தார்.
நாலாயிரத்தில் திருவாய்மொழி நீங்கலாக மூவாயிரத்துக்கும் விளக்கம் அருளினார்.

2- திருக்கோஷ்டியூர் நம்பி- இவர் திருமந்திரத்துக்கும், சரம ச்லோகத்துக்கும் விளக்கம் அருளினார்.

3- திருவரங்கப் பெருமாள் அரையர்- திருவாய்மொழி ஓதி சில விசேஷங்களான நல்வார்த்தைகள் அருளிச் செய்தார்.

4- பெரிய திருமலை நம்பி- ஸ்ரீமத் ராமாயண அர்த்தங்கள்.

5- திருமலையாண்டான்- திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்குப் பல திருநாமங்கள் உண்டு. அவையாவன

1- ராமானுஜன் -இவர் பெற்றோர் இட்டது

2- யதிராஜர்- காஞ்சி பேரருளாளப் பெருமாள் இவர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஏற்ற பொழுது அருளியது
   
3-உடையவர்- திருவரங்கத்துப் பெருமாள்நம் உடையவரேஎன்றழைத்ததால் அடைந்தது

4- எம்பெருமானார்- திருக்கோஷ்டியூர் அடியார்கள் இட்டது

5- இளையாழ்வார் மேலும் லக்ஷ்மண முனி- முன்னோர் உரையில் வழங்கப் படுபவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக