திங்கள், 17 ஜனவரி, 2011
NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை
தனியன் 2
அன்னவயற் புதுவை யாண்டாள் அரங்கற்க்குப்
பன்னு திருப்பாவை பல்பதியம்_இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.
அன்னவயல் என்பது உடலை வளர்க்கும் நெல் முதலிய தானியங்கள் வளரும் இடம் என்றும், அன்னம் நீரைப் பிரித்து பாலை மட்டும் பருகுவது போல் தீய எண்ணங்களை விடுத்து ஆத்மாவை வளர்க்கும் சிறந்த எண்ணங்கள் மட்டுமே தோன்றும் மனத்தையும் குறிப்பதாக இருவிதமாகப் பொருள் கொள்ளலாம். மனதாகிற வயலில் நீரை ஒதுக்கி பாலை மட்டும் பருகும் அன்னப் பறவை போல எண்ணம் சொல், செயல், மூன்றாலும் ஸாரமற்ற விஷயங்களை ஒதுக்கிவிட்டு ஸாரமான பொருளைமட்டுமே கொள்ளவேண்டும் என்பதையே ’அன்னவயல்’ குறிக்கிறது.
பகவானை அடைய முப்பத்திரண்டு வித்யைகள் [வழிகள்] வேத சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. இவை பாரதத்தில் மிகப் பிரபலமாகவும் பலராலும் கைக்கொள்ளப் பட்டதாயும் உள்ளவை. இவை தவிர பகவானையடைய ஆண்டாள் ஒரு புது வித்யையை இங்கே கற்றுத்தருகிறாள். கன்னிப் பெண்கள் நாட்டில் நல்ல மழை பெய்யவும் தங்கள்பால் குறையாத அன்பும், நிறைந்த ஆயுளும் உடையவர்களான கணவர்கள் தங்களுக்குக் கிடைக்கவேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக நோற்றுவரும் இந்நோன்பினால் எம்பெருமானும் மகிழ்கிறான், மோக்ஷம் வரையிலான உயர்ந்த பலன்களையும் கொடுக்கிறான் என்பதை நோக்கும்பொழுது இந்தத் திருப்பாவையும் ஒரு மோக்ஷ வித்யையே என உணரலாம். இது ஆண்டாள் காட்டிய புது வழி. பிராட்டியான இவளுக்கு ஜீவர்கள் அனைவரும் குழந்தைகளே. தம் குழந்தைகளை நல்வழிப்படுத்த தாயான இவளுக்கும் தகுதி உண்டன்றோ!
கடந்த யுகங்களான க்ருத, த்ரேதா மற்றும் த்வாபர யுகங்களில் முன் சொன்ன இந்த 32 வித்யைகளைக் கைக்கொண்டு மோக்ஷ பலனைப் பெற வல்லவர்களாக விளங்குவதற்குத் தேவையான நீண்ட ஆயுள், நோயற்ற உடல், யோகாப்யாஸம் முதலியனவற்றால் 10 [கர்ம5, ஞான5] இந்த்ரியங்களையும் தன் வசத்தில் வைத்துக்கொள்ளவல்ல உயர்ந்த சக்தியும், இந்த வித்யைகளுக்குத் தேவையான சாதனங்கள் ஆகிய அனைத்தையும் உடையவர்களாக மக்கள் விளங்கினர். மாறாக இக்கலியுகத்திலோ குறைந்த ஆயுள், பிணி, பசி, மூப்பு, துன்பம் இவைகளால் பீடிக்கப்பட்ட உடல் கட்டுப்படுத்த இயலாத இந்த்ரியங்களினால் உண்டாகும் தூக்கம் சோம்பல் ஆகிய தாழ்ந்த குணங்கள் , தேவையான சாதனங்களை வாங்கவியலாத ஏழ்மை ஆகியவற்றால் அந்த 32 வித்யைகளை இவர்களால் கைக்கொள்வியலாது என்பதை உணர்ந்த ஆண்டாள் மிக எளியதான இவ்வழியைக் காட்டினாள். மிகக் குறைவான காலச் செலவும், பொருட் செலவும் உடைய இவ்வித்யையால் பகவானும் மகிழ்ந்து இவ்வுலகில் நல்ல வாழ்வையும் பின்னர் மோக்ஷ பலனையும் கொடுக்கவல்லதானது . ஆண்டாள் பாலை பரிபாடல் முதலிய சங்க நூல்களிலிருந்து தெரிந்து, அதைப் பிற விஷயங்களிலிருந்து பிரித்தெடுத்து ஒரு புது வித்யையாக ஆக்கித் தந்துள்ளாள் என்பதால் புது வித்யையைத் தந்த ஆண்டாளை ’ புதுவை’ ஆண்டாள் என்கிறார்.
இது புதிது. பரி பாடல், நற்றிணை முதலிய பல சங்க நூல்களில்காணப்படும் பலவிதமான கலைகளிலிருந்து இதைப் பிரித்தெடுத்து தொடுத்துக் கொடுத்ததால் இதற்கு சங்கத் தமிழ் மாலை என்னும் பெயரை இறுதிப் பாட்டில் இவள் தானே சூட்டியுள்ளாள்.
வேதத்திற்குப் பொருந்தக் கூடியது, வேதத்தின் ஒப்புதல் இதற்குண்டு. ஆதலால் இது ஒரு வேத வித்யை. எனவே இதை வேதப் பொருளான அரங்கர்க்குக் கொடுத்தாள்.
இயற்றமிழால் ஆக்கப்பட்டது போல் காணப்படும் இந்நூலை இன்னிசையால் என்று இசைத் தமிழாகக் கூறுகிறாரே [சங்கீதம் கீர்த்தனைகள் போன்றவை இசைத் தமிழ்] இசைத்தல் என்பது மீண்டும் மீண்டும் ஜபித்தலைக் காட்டும் [chant, riff] இத்திருப்பாவையின் எழுத்துக்கள் மந்திரங்களில் உள்ள எழுத்துக்களைப் போல் எதிர்பார்க்கும் சிறந்த பலன்களையெல்லாம் கொடுக்கக் கூடியவையாக இருக்கின்றன. எனவே இந்நோக்கில் இது இசைத் தமிழ். [இசை என்பதற்கு கேட்பவரை இசையவைக்க வல்லது என்றும் பொருள்] உயர்ந்த பலனைத் தர வல்ல இந்த இசையை இன்னிசையால் என்று கூறினார்.
பல்பதியம்- வடமொழியில் ஒருமை, இருமை, பன்மை [ஏக வசனம், த்வி வசனம், பகு வசனம்] என்னும் அமைப்பு உண்டு. இதில் இரண்டுக்கு மேற்பட்ட பல என்பதன் தொடக்க எண்ணான மூன்று என்பதை உள்ளடக்கி மூன்று பதிகம் , முப்பது பாட்டு என்று பொருள். பூமாலையானது பூ என்னும் சொல்லுக்கு அதன் வடமொழி பெயராகிய ‘ஸுமனஸ்’ அதாவது நல்ல உள்ளம் என்றும் பொருள் கொள்ளலாம்.[ இவள் ’அன்னவயல்’ உடைய ஆண்டாளாயிற்றே!]
ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அம்சமாக அவதரித்தவள். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமிக்கு இயல்பு [தன்மை] ’கந்தம்’ எனப்படும் வாசனையாகும் எனவே இவள் சூடிக்கொடுத்த பூமாலை வெளிப்புற இந்த்ரியமான மூக்கிற்கு இன்பம் கொடுப்பது. இவள் பாடிக்கொடுத்த பாமாலையோ வேத சாஸ்த்ரங்கள் அறுதியிடும் உண்மைப் பொருள்களாகிய மணங்கள் வீசுவது. அதனால் ஞானமும் அனுஷ்டானமும் பெருகி அதன் பலனாக மோக்ஷமும் கிடைத்துவிடுவதால் உள்ளேயுள்ள ஆத்மாவின் இன்பத்துக்கும் காரணமாய் அமைகிறது. இவள் தாய். ஆத்மாக்கள் எல்லாம் இவள் குழந்தைகள். குழந்தைகள் எதற்கும் தாயாரையே சொல்வார்கள். அதனால் சூடிக் கொடுத்தாளைச் சொல்லு என்று முடித்தார். இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’ யைக் கொண்டு சூடிக்கொடுத்தாளை என்பதுடன் நான்காம் வேற்றுமை உருபு ‘கு’ என்பதைக்கொண்டு சூடிக்கொடுத்தாளுக்குச் சொல்லு என்றும் ஏழாம் வேற்றுமை உருபைக்கொண்டு [இல்,இடம், கண்] சூடிக்கொடுத்தாளிடம் சொல்லு என்றும் பொருள் கொள்ளலாம் ஏனெனில் ”பொருள் சேர் மருங்கின் வேற்றுமை சாரும்”, பொருள்போகும் வழியில் வேற்றுமையை மாற்றிக்கொள்ளலாம் என்பது தமிழ் இலக்கணம்.
சனி, 15 ஜனவரி, 2011
ஆசார்யர் பெருமை
ஆசார்யரே நாம் கண்ணெதிரில் காணும் தெய்வம் என்கிறார் ஸ்ரீ ராம பிரான். ஆசார்யரைப் பெறாத ஒருவனது வாழ்க்கை வீணாகிறது. அது பழமற்ற மரம்போல, விளக்கற்ற வீதிபோல, நீரில்லாத குளம் போல, பூச்சூடாத பெண்போல, நெற்றிக்கிடாத முகம் போல, ஒளியில்லாத வானம் போல, ஸ்வரம் இல்லாத சங்கீதம் போல, தந்தியில்லாத வீணை போல,
ஸாரதியில்லாத ரதம் போல என்பர் பெரியோர்
.
செல்லும் வழி, சேருமிடம் தெரியாமல் வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்பவர்கள் ஆசார்யர்கள்.எண்ணை தேய்த்துக் குளிப்பதற்காக ஒரு பெண் தன் நகைகளைக் கழற்றி ஒரு சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து வைக்கிறாள். குளித்துவிட்டு வந்தபின் வைத்த இடத்தை மறந்ததால் அதை மிகுந்த கவலையுடன் வெகு நேரம் வீடு முழுவதும் தேடுகிறாள். நெடு நேரம் கழித்து அச்சிவப்புப் பட்டுத்துணி கண்ணில் பட்டதுமே கவலையெல்லாம் நொடியில் மறந்து ஆறுதல் அடைகிறாள். அப்பட்டுத்துணி கண்ணில் பாட்டாலே போதும் நகை கிடைத்த மகிழ்ச்சி! அதுபோல் ஸதாசார்யரைப் பெற்றுவிட்டாலே போதும். நம் வாழ்வெனும் ஓடம் கரை சேர்ந்துவிடும் என்று கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.
NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்
NRK ஸ்வாமிஎழுதிய நாள்-20.12.1948
1] 12 ராசிகளை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய பாடல் [சொற்றொடர்]
ஆடு மாடு இரட்டை நண்டு
அரி சிறுமி தூக்கும் தேளும்
விற்பெருமீன் குடமும்
மீனும் ராசியாவன
2] ஏழை, இடையன், இளிச்சவாயர் என்கிறார் இடைக்காடர் என்னும் தமிழ் புலவர் ராமன், கிருஷ்ணன், ந்ருஸிம்ஹன் என்னும் தெய்வங்களை!
ஆசார்யரே நாம் கண்ணெதிரில் காணும் தெய்வம் என்கிறார் ஸ்ரீ ராம பிரான். ஆசார்யரைப் பெறாத ஒருவனது வாழ்க்கை வீணாகிறது. அது பழமற்ற மரம்போல, விளக்கற்ற வீதிபோல, நீரில்லாத குளம் போல, பூச்சூடாத பெண்போல, நெற்றிக்கிடாத முகம் போல, ஒளியில்லாத வானம் போல, ஸ்வரம் இல்லாத சங்கீதம் போல, தந்தியில்லாத வீணை போல,
ஸாரதியில்லாத ரதம் போல என்பர் பெரியோர்
.
செல்லும் வழி, சேருமிடம் தெரியாமல் வாழும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஒளி விளக்காகத் திகழ்பவர்கள் ஆசார்யர்கள்.எண்ணை தேய்த்துக் குளிப்பதற்காக ஒரு பெண் தன் நகைகளைக் கழற்றி ஒரு சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து வைக்கிறாள். குளித்துவிட்டு வந்தபின் வைத்த இடத்தை மறந்ததால் அதை மிகுந்த கவலையுடன் வெகு நேரம் வீடு முழுவதும் தேடுகிறாள். நெடு நேரம் கழித்து அச்சிவப்புப் பட்டுத்துணி கண்ணில் பட்டதுமே கவலையெல்லாம் நொடியில் மறந்து ஆறுதல் அடைகிறாள். அப்பட்டுத்துணி கண்ணில் பாட்டாலே போதும் நகை கிடைத்த மகிழ்ச்சி! அதுபோல் ஸதாசார்யரைப் பெற்றுவிட்டாலே போதும். நம் வாழ்வெனும் ஓடம் கரை சேர்ந்துவிடும் என்று கவலையின்றி நிம்மதியாக இருக்கலாம்.
NRK ஸ்வாமி பக்கம் - சிந்தனைப் பெட்டகம்
NRK ஸ்வாமிஎழுதிய நாள்-20.12.1948
1] 12 ராசிகளை நினைவில் வைத்துக்கொள்ள ஒரு எளிய பாடல் [சொற்றொடர்]
ஆடு மாடு இரட்டை நண்டு
அரி சிறுமி தூக்கும் தேளும்
விற்பெருமீன் குடமும்
மீனும் ராசியாவன
2] ஏழை, இடையன், இளிச்சவாயர் என்கிறார் இடைக்காடர் என்னும் தமிழ் புலவர் ராமன், கிருஷ்ணன், ந்ருஸிம்ஹன் என்னும் தெய்வங்களை!
வெள்ளி, 14 ஜனவரி, 2011
NRK ஸ்வாமி பக்கம் - சங்கத் தமிழ் மாலை
தனியன்-1
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:
நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே
கோதாதஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய:
பரமாத்மாவாகிய ஸ்ரீமந் நாராயணன் ஒருவனே புருஷன்.[புருஷனைப்பற்றிச் சொல்லும் ஸூக்தம் புருஷ ஸூக்தம்] ஜீவாத்மாக்கள் அனைவரும் ஸ்த்ரீகள் என்பது நம் ஸம்ப்ரதாயம். இதன்படி ஜீவர்கள் அனைவரும் தம் புருஷனாகிய பரமாத்மாவைச் சென்றடைய வேண்டும் என்பதே நோக்கமாகி விடுகிறது. நாம் அவனது அடியார்கள் என்னும் ஞானம் உண்டாகி, தொடர்ந்து அவன்பால் பக்தி ஏற்பட்டு அது வளர்ந்துவிட்ட நிலையில் அவர்கள் இதயக் குகையிலே பகவான் தானே வந்து அமர்கிறான். [’அகம்படி வந்து புகுந்து ----- பள்ளி கொள்கின்ற பிரானை’- பெரியாழ்வார் திருமொழி 5-2-10]. பெண்களின் மார்பகங்களைக் கூறுவதன் உள்ளுறைப் பொருள் ‘பக்தி’யாகும் என்பது ஆழ்வார்களின் பாசுரங்களைக் கொண்டு அறியலாம். நப்பின்னையின் மார்பின் மேல் படுத்துறங்கும் என்னும் இத்தனியனும், மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும் என்னும் 23வது பாடல் சொற்றொடரும் ஒரே பொருளுடையவை. இங்கே அந்தர்யாமியாய் விளங்கும் எம்பெருமானைத் துயிலெழுப்புகிறாள் ஆண்டாள். யசோதை இளங்சிங்கம் என்று முதல் பாட்டிலும் 23வது பாடலில் அவ்விளஞ்சிங்கம் வளர்ந்த சிங்கமாகக் காட்டப்படுவதையும் கொண்டு ஆண்டாளின் இதயத்தில் வீற்றிருக்கும் தெய்வம் ஸ்ரீ ந்ருஸிம்ஹன் என்பதை உணரலாம். இத்தனியனில் பராசர பட்டர்” நப்பின்னையின் இதயத்தில் உறங்கிகொண்டிருக்கும் கண்ணபிரானை எழுப்பி அவனுடைய பரத்வத்தை [மேன்மையை] சொல்லி , தான் சூடிக்களைந்த மாலையால் கட்டுப்படும் அவனை வற்புறுத்தி அவனுடைய குணங்கள் செயல்களை அனுபவிக்கிறாள் ஆண்டாள். அவளுக்கு என் நமஸ்காரங்கள்” என்கிறார்.
தன் பக்தர்களிடம் பாராமுகமாயிருத்தல் பகவானுக்கு அழகல்ல. நப்பின்னை போன்ற உயர்ந்தோரின் பக்தியில் திளைத்து மகிழும் கண்ணபிரான் தன்னைப் போன்ற எளிய பக்தர்களுக்கும் முகம் கொடுத்தல் வேண்டும் என்று எம்பெருமானுக்கு உணர்த்துகிறாள் என்பதை ”அத்யாபயந்தி” என்னும் சொல் விளக்குகிறது.
ஆண்டாள் பக்தர்களைப்பற்றிச் சிந்தியாது உறங்கும் [உறங்குவதுபோல் பாவனை செய்யும்] பெருமாளையும், பெருமாளைப் பற்றிய சிந்தனையில்லாது உறங்கிக் கிடக்கும் ஜீவர்களையும் துயிலெழுப்பி உணர்த்தும் பிரபந்தமே திருப்பாவை.
வியாழன், 13 ஜனவரி, 2011
ஸ்ரீ ராமானுஜர்
வேதம் கற்பிப்பவர்,வேதாந்த ஞானம்,சாஸ்திரங்களைப் போதிப்பவர், ஸமாச்ரயண, பரந்யாஸங்களைச் செய்து வைப்பவர்,ஸ்ரீபாஷ்யம், பகவத்கீதைமுதலிய நூல்களை காலக்ஷேபமாக ஸாதிப்பவர் என ஒருவர் பல முகங்களில் ஆசார்யர்களைப் பெற்றுப் பயனடையலாம்.
விசிஷ்டாத்வைதத்தை விளங்கச் செய்த ஸ்ரீ ராமானுஜர் ஐந்து ஆசார்யர்களைப் பெற்றிருந்தார்.
1-ஸ்ரீ பெரியநம்பி-மதுராந்தகத்தில் பஞ்சஸம்ஸ்காரம் செய்து வைத்து திருமந்திரம், த்வயம், சரமச்லோகம் என்னும் மூன்று ரஹஸ்யங்களுள் த்வயத்துக்கு மட்டும் அர்த்தம் ஸாதித்தார்.
நாலாயிரத்தில் திருவாய்மொழி நீங்கலாக மூவாயிரத்துக்கும் விளக்கம் அருளினார்.
2- திருக்கோஷ்டியூர் நம்பி- இவர் திருமந்திரத்துக்கும், சரம ச்லோகத்துக்கும் விளக்கம் அருளினார்.
3- திருவரங்கப் பெருமாள் அரையர்- திருவாய்மொழி ஓதி சில விசேஷங்களான நல்வார்த்தைகள் அருளிச் செய்தார்.
4- பெரிய திருமலை நம்பி- ஸ்ரீமத் ராமாயண அர்த்தங்கள்.
5- திருமலையாண்டான்- திருவாய்மொழி காலக்ஷேபம் சாதித்தார்.
ஸ்ரீ ராமானுஜருக்குப் பல திருநாமங்கள் உண்டு. அவையாவன
1- ராமானுஜன் -இவர் பெற்றோர் இட்டது
2- யதிராஜர்- காஞ்சி பேரருளாளப் பெருமாள் இவர் ஸந்யாஸ ஆச்ரமத்தை ஏற்ற பொழுது அருளியது
3-உடையவர்- திருவரங்கத்துப் பெருமாள் ‘நம் உடையவரே’ என்றழைத்ததால் அடைந்தது
4- எம்பெருமானார்- திருக்கோஷ்டியூர் அடியார்கள் இட்டது
5- இளையாழ்வார் மேலும் லக்ஷ்மண முனி- முன்னோர் உரையில் வழங்கப் படுபவை
புதன், 12 ஜனவரி, 2011
குருவா, கோவிந்தனா?
’ஆசார்யர்’ என்னும் சொல்லுக்கு சாஸ்திரங்களை நன்கு அறிந்து கொண்டு அதன் வழி தானும் நடந்து பிறரையும் நடக்கச் செய்பவர் என்பது பொருள். ‘குரு’ என்னும் இந்த இரண்டெழுத்துச் சொல்லுக்கு இருளை அகற்றி ஒளி தருபவர் என்பது பொருள். ஆசார்யனை தெய்வமாக நினை [ஆசார்ய தேவோ பவ] என்கிறது வேதம். தத்வம், பரம்பொருள், சாஸ்திரம், வேதம். வேதாந்தங்கள் பற்றிய ஞானத்தை இவர்கள் போதிப்பர். நம் ஸம்ப்ரதாயத்தில் பெருமாளே [ஸ்ரீமந் நாராயணனே] முதல் ஆசார்யன். ’கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’, ‘குருஸாக்ஷாத் பரம் ப்ரஹ்ம’ என்பவை இதனைக் கூறும்.
தெய்வத்தை நமக்குக் காட்டித்தந்து அவரை அடைவதற்கு வழியையும் கற்பிக்கும் ஆசார்யனை [தெய்வத்தைப் பாடாமல்] பாடுவதில் தவறில்லை என்பது கருத்து. ஏனெனில் இந்த ஆசார்யர் இல்லையெனில் தெய்வத்தை அறிந்துகொண்டிருக்கமுடியாதே!
‘குரு கோவிந்த்’ எனத் தொடங்கும் கபீர்தாஸரின் தோஹா [குறள்] கூறும் கருத்தும் இதுவே!
GURU GOBIND DOU KHADE KAKE LAGOO PAYE,
BALIHARI GURU APNE,GOBIND DIYO MILAYE
"குரு, கோவிந்தன் இருவரும் ஒரே சமயத்தில் என் எதிரில் வந்து நின்றால் நான் முதலில் யார் திருவடிகளில் விழுந்து வணங்குவேன்? குருவின் திருவடிகளில் தான், ஐயம் என்ன! இந்த கோவிந்தனை எனக்குக் காட்டிக்கொடுத்தவரே இந்த குருதானே!"என்கிறார்.
ஒருவருக்கு ஆசார்யர் ஒருவர்தானா? அல்லது பலர் இருக்கலாமா?
செவ்வாய், 11 ஜனவரி, 2011
ஆழ்வார்களும் அருளிச்செயலும்
![]() |
"ஸ்ரீவைஷ்ணவர்” என்னும்பொழுது முதலில் நினைவுக்கு வருபவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் ஸ்ரீமந்நாராயணனிடம் அவனுடைய தன்மை [nature] [ஸ்வரூபம்] அழகிய தோற்றம் [ரூபம்] திருக்கல்யாணகுணங்கள் , பெருமைகள் [விபவம்] செல்வம் [ஐச்வர்யம்] ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். பெருமாளிடம் ஆழ்ந்துவிட்டதால் ‘ஆழ்வார்கள்’ என அழைக்கப்பட்டனர். இவர்கள் பக்தியுடன் பாடிய பாடல்களின் தொகுப்பே நாலாயிர திவ்யப்ரபந்தம் . வடமொழியில் ‘ப்ரகர்ஷேண பத்நாநி’ என்பதே ப்ரபந்தம் என்னும் சொல்லாயிற்று. பெருமாளுடன் நம்மை இறுக்கிக் கட்டி வைப்பதால் இப்பெயர். தமிழில் எழுதப்படும் பாடல்களை செய்யுள், பாடல் என்று அழைப்பது போலன்றி இப்ரபந்தத்திலுள்ள பாடல்கள் பாசுரங்களென்று குறிப்பிடப்படுகின்றன. தீவிர பக்தியினால் தாம் பெற்ற அனுபவங்களை நமக்கும் உணர்த்துவதற்காக ’அருளுடன் செய்த’ இப்பாசுரங்கள் ”அருளிச் செயல்” எனவும் வழங்கப்படுகின்றன.
ஆழ்வார்கள் பன்னிருவர் [12] என்றும் பதின்மர் [10] என்றும் கூறுவதுண்டு. ஆண்டாள் பெருமாளின் தேவியருள் ஒருவர், மதுரகவிகள் மற்ற ஆழ்வார்களைப் போல் எம்பெருமானைப் பாடாமல் தம் ஆசார்யராகிய நம்மாழ்வாரை மட்டுமே பாடியதால் இவ்விருவரை சேர்க்காமல் பதின்மர் [10] என்று கூறுகிறோம். ஸ்வாமி தேசிகன் ஆழ்வார்களில் எண்ணப்படாத திருவரங்கத்தமுதனார் என்பவர் அருளிச் செய்த இராமானுச நூற்றந்தாதி பாடல்களையும் சேர்த்தே நாலாயிரம் என்று கணக்கிடுகிறார். மதுர கவிகள் ’தொல்வழியே [ஆசார்யர்களையே தெய்வமாகக் கொண்டாடுவது ]நல்வழி என்று காட்டிக்கொடுத்துள்ளார்’ என்பது ஸ்வாமி தேசிகனின் கருத்து. திருவரங்கத்தமுதனாரும் இந்நல்வழியைத்தானே கைக்கொண்டு பாடினார்!
பெருமாளைப் பாடாமல் ஆசார்யர்களை மட்டுமே பாடுவது சரியா?
Alwars image- Thanks to Kumbakonam Tradition.org
திங்கள், 10 ஜனவரி, 2011
எல்லாம் நன்மைக்கே
'பூமியில் தர்மத்துக்கு வாட்டமும் அதர்மத்துக்கு எழுச்சியும் நேரும்போதெல்லாம் வந்து பிறக்கிறேன்' [யதா யதா ஹி---- கீதை 4-7] என்றும் நல்லோரைக் காக்கவும், தீயோரை அழிக்கவும்,சிறந்த தர்மத்தை நிலைநாட்டவும் ஒவ்வொரு யுகத்திலும் அவதரிக்கிறேன் [பரித்ராணாய----கீதை4-8] என்றும் ஸ்ரீகிருஷ்ண பகவான் அருளிச் செய்துள்ளார். எனவே பெருமாளும் பிராட்டியும் இணைந்து பூமியில் வந்து அவதாரமாகிய நாடகத்தை நடத்திக்காட்டுவது எல்லாம் நம்முடைய நன்மைக்காகவே!
இது தொடர்பான ஒர் நகைச்சுவை நிகழ்ச்சி
ஸ்ரீ உ.வே. ஸேவா ஸ்வாமி அவர்களின் பேச்சில் எப்பொழுதும் மெல்லிய நகைச்சுவை இழையோடும். வட இந்தியாவில் ஒருமுறை ஓரிடத்தில் உபன்யாஸம் செய்து முடித்ததும் ஒருவர் அவரிடம் வந்து பெருமையுடன் "ஸ்வாமி! ராமர், க்ருஷ்ணர் போன்ற தெய்வங்களெல்லாம் பாரதத்தின் வட தேசமாகிய எங்கள் பகுதியில்தான் அவதரித்துள்ளனர். உங்கள் பகுதிக்கு அந்த பாக்யம் கிடைக்கவில்லையே" என்று வினவினார். ஸ்வாமி புன்னகையுடன் " தர்மத்துக்கு அழிவு ஏற்படும்பொழுது அங்கு, அப்பொழுது வந்து அவதரிப்பதாக பகவான் கீதையில் சொல்லியிருக்கிறாரே. இங்கு அதற்கு ஏற்பட்ட அவசியம் எங்கள் பகுதிக்கு நேரவில்லையென்பதே காரணமென நினைக்கிறேன்" என்று கூற கேட்டவர் தலை குனிந்தவராய் அங்கிருந்து அகன்றுவிட்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)