பெருமாள், தாயார், ஸ்வாமி தேசிகன், ஆசார்யர்கள் குறிப்பாக 44, 45, 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர்கள் அனுக்ரஹத்தினாலும், அடியேனுக்கு சிறிதளவேனும் ஞானம் பெறும் வண்ணம் காலக்ஷேபம் ஸாதித்தருளிய ஸ்ரீ.உ.வே.ஸேவா ஸ்வாமி ஆகியோரின் திருவடிகளில் வணங்கி அவர்களுடைய நல்லாசிகளுடன் எழுதத் தொடங்குகிறேன்.
விஷ்ணுவை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள். ’ ஸ்ரீ’யுடன் கூடிய விஷ்ணுவை வணங்குபவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்கள். தாயாரில்லாமல் பெருமாளை மட்டும் ஸேவிப்பது நம் ஸம்ப்ரதாயமல்ல. “ஸ்ரீமந்நாராயணன்” என்பதற்குத் திருவுடன் கூடிய திருமால் என்பது பொருள்.
“ஸ்ரீ” என்னும் வடமொழி எழுத்து /சொல்லுக்கு லக்ஷ்மி, பெண், செல்வம், சொத்து, மஹிமை, அழகு, காந்தி[ஒளி], நற்குணம், மேன்மை, தாமரைப்பூ, வில்வமரம் எனப் பல பொருள் உண்டு. “ஸ்ரீக்ருபா” என்னும் சொல்லுக்கு ‘லக்ஷ்மியின் அருள்’ என்பது.
“ஸ்ரீ” என்று மனிதர்களின் பெயருக்கு முன்னால் சேர்ப்பது ‘மேன்மை தங்கிய’ [மேதகு] என மரியாதை நிமித்தமான குறியீடே.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு’ஸ்ரீ’ மற்றும் ’காந்தி’ என்பதின் அர்த்தம் அறிந்தேன்.
அதனால் தான் அடியேன் தயாஸ்ரீயை காந்திமதி கல்யாணமண்டபத்தில் மணமுடித்தேன். அப்படிபட்ட ஸ்ரீயை பெற்ற முனைவர் ஹேமா அவர்களின் ’ஸ்ரீ க்ருபா’ தயாஸ்ரீயை போல் சிறப்பாக இருப்பதில் ஐயமில்லை.
சுதர்சன்
Lets say every household needs one or many ’ஸ்ரீ’ :-)
பதிலளிநீக்குIt is said that reciting the 25 beautiful slokams of Swami Desikan's "Sri Sthuthi" confers Sarva MangaLam to the reciter.
Did not know I have to recite "Sri Sthuthi" as there are ’ஸ்ரீ’s in every household.
பதிலளிநீக்குNice effort. Keep writing these valuable nuggets. Hope to get some SreeKrupa by reading these.